தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

மணல் கடத்தலை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலரை தாக்க முயற்சி! - காவல்துறை விசாரணை

தென்காசி: சேர்ந்தமரம் அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலரை, மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தாக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Attempt to attack village administration officer who went to stop sand smuggling!
Attempt to attack village administration officer who went to stop sand smuggling!

By

Published : Dec 24, 2020, 10:34 PM IST

தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் அருகேவுள்ள ஆனைகுளம் கிராமத்தின் ஓடையில் இருந்து மணல் அள்ளுவதாக ஆனைகுளம் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் வெள்ளப்பாண்டி மற்றும் கிராம உதவியாளர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, குலையநேரியைச் சேர்ந்த முருகன், அவரது மனைவி சித்திரைக்கனி, ஆகியோர் அதே பகுதியைச் சேர்ந்த தாசன் என்பவருக்குச் சொந்தமான டிராக்டரில் மணல் கடத்த முயன்றுள்ளனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, டிராக்டர் உரிமையாளர் தாசன் கிராம நிர்வாக அலுவலரை தாக்க முயன்றுள்ளார்.

தாக்குதலில் இருந்து தப்பிய கிராம நிர்வாக அலுவலர், இச்சம்பவம் தொடர்பாக சேர்ந்தமரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

மேலும், கிராம நிர்வாக அலுவலரை தாக்க முயன்றவர், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஓட்டைப் பிரித்து கொள்ளையடித்த திருடன் 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது!

ABOUT THE AUTHOR

...view details