மதுரையை சேர்ந்தவர் கணேஷ் ஆனந்த் (28). இவர் திரைத்துறையில் உதவி இயக்குநராக உள்ளார். இவரும் மதுரையைச் சேரந்த பெண் ஒருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், அப்பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் அந்த பெண்ணை சென்னைக்கு அழைத்து வந்த கணேஷ் ஆனந்த், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
குடிபோதையில் தகராறு - சினிமா உதவி இயக்குநர் கைது - உதவி இயக்குநர்
சென்னை: போதை தலைக்கேறி தனியார் தங்கும் விடுதியில் தகராறு செய்த உதவி இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவரம் அறிந்த பெண்ணின் உறவினர்கள் நேரடியாக விடுதிக்கு வந்து, கணேஷ் ஆனந்தை தாக்கியுள்ளனர். இதனால் விடுதி உரிமையாளர் ஜான் பிரிட்டோ அனைவரையும் அங்கிருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார். அப்போது போதையில் இருந்த கணேஷ் ஆனந்த், அறையின் கண்ணாடியை உடைத்து உரிமையாளரை தாக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, விடுதி உரிமையாளர் ஜான் பிரிட்டோ கொடுத்த புகாரின் பேரில், கணேஷ் ஆனந்த்தை கைது செய்து திருவல்லிக்கேணி காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ரவுடி கல்வெட்டு ரவியின் தம்பி கைது!