தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

பொள்ளாச்சியில் சிறுமிகளை கர்ப்பமாக்கிய இருவர் கைது! - பொள்ளாச்சியில் சிறுமிகளை கர்ப்பமாக்கிய இருவர் கைது

கோவை: பொள்ளாச்சி அருகே இரண்டு சிறுமிகளை கர்ப்பாக்கிய இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

arrest
arrest

By

Published : Feb 14, 2020, 10:30 PM IST

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த தொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் கணபதி. கூலி வேலை செய்து வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவியை கடத்தித் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்ததில், அவர் ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

arrest

இதனையடுத்து, கோவை மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் அரசு மருத்துவர்கள் தகவல் கொடுத்தனர். பின்னர், குழந்தைகள் நல அலுவலர் கொடுத்தப் புகாரின்பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கணபதியை கைது செய்தனர்.

arrest

இதனிடையே, பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஷேக்பீர் என்பவர், 16 வயது பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைக் கூறி கர்ப்பமாக்கியுள்ளார். இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர், இருவரையும் கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மூன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- கூலி தொழிலாளி கைது

For All Latest Updates

TAGGED:

bosco arrest

ABOUT THE AUTHOR

...view details