விருதுநகர் மாவட்டத்தை அடுத்துள்ள வீரசோழன் பகுதியைச் சேர்ந்தவர் பசீர். இவர் சென்னையில் பசுமை சக்தி என்ற பெயரில் சூரிய ஒலியில் இயங்கும் சோலார் ஆற்றல் பொருள்களை விற்பனை செய்துவருகிறார்.
சென்னையைச் சேர்ந்த கலியூர் ரஹ்மான் என்பவருக்கு சோலார் நிறுவனம் அமைத்துத் தருவதாகக் கூறி கடந்த நான்காண்டுகளில் பல்வேறு வகையில் ரூபாய் 1.50 கோடியை அவர் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போதுவரை கலியூர் ரஹ்மானுக்கு, பசீர் சோலார் நிறுவனம் அமைத்துத் தரவில்லை என அறியமுடிகிறது.
இந்நிலையில், தான் கொடுத்த பணத்தை திரும்பத்தருமாறு ரஹ்மான் கேட்டதற்குத் தர மறுத்ததோடு, அவரை கொலைசெய்து விடுவேன் என பசீர் மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது.
இதனால் அச்சமடைந்த கலியூர் ரஹ்மான், இதுகுறித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றினை இன்று (நவ. 19) அளித்துள்ளார்.