பம்மல் சங்கர் நகரைச் சேர்ந்தவர் மலர்விழி (37). இவர், தனது வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், கண்ணிமைக்கும் நேரத்தில் மலர்விழியின் கழுத்தில் இருந்த தாலி சங்கிலியைப் பறிக்க முயன்றனர். அதற்குள் சுதாரித்துக் கொண்ட மலர்விழி, சங்கிலியை கைகளால் இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.
இதனால் கொள்ளையர்கள் வெறுங்கையுடன் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். பின்னர் இந்நிகழ்வு குறித்து, சங்கர் நகர் காவல் நிலையத்தில் மலர்விழி புகாரளித்தார். அதன்பேரில், செயின் பறிக்க முயன்றவர்களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அனகாபுத்தூரைச் சேர்ந்த பிரேம்குமார் (20) மற்றும் மூர்த்தி (19) ஆகியோரை, வீட்டில் பதுங்கியிருந்த போது சுற்றி வளைத்து கைது செய்தனர்.