ஆந்திர மாநிலம், திருப்பதி ரயில் நிலையத்திற்கு முன் அமைந்துள்ள பேரிகேட்டின் மேல் ஒருவர் ஏறி குதிக்க இளைஞர் ஒருவர் முயன்றுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும் காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், பேரிகேட் மீது ஏறியவரை கீழே இறக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர் இறங்க மறுத்துள்ளார். குடிபோதையில் இருந்த அவர், பின்னர் தொங்கியவாறு கீழே குதித்துள்ளார்.