கள்ளக்குறிச்சி அடுத்த சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றில் சந்தேகத்திற்குரிய மூன்று மூட்டைகள் கிடப்பதை ஒருவர் கண்டுள்ளார். இதையடுத்து, அருகில் சென்று பார்த்தபோது அது தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஹான்ஸ் ரக போதைப் பொருள் என்பது தெரியவந்துள்ளது.
அரசு பேருந்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தல்; ஒருவர் கைது! - தடை செய்யப்பட்ட போதைப் பொருள்
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அடுத்த சங்கராபுரத்தில் அரசு பேருந்திலிருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, உடனடியாக அந்த பைகளை சங்கராபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதில், சுமார் ஒன்பது ஆயிரம் பாக்கேட்டுகளில் சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹான்ஸ் ரக போதைப் பொருட்கள் எடுத்து வரப்பட்டதைக் காவல் துறையினர் உறுதி செய்தனர்.
தொடர்ந்து, அதுகுறித்து விசாரணை செய்த காவல் துறையினர், அந்த போதைப் பொருட்கள் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவருக்குச் சேரவேண்டியது எனத் தெரியவந்தது. இதையடுத்து, அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரைக் கைது செய்துள்ளனர்.