தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

பெற்றோர் கண்டித்ததால் 8 ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை!

உறவினர் வீட்டில் பணம் திருடியதை பெற்றோர்கள் கண்டித்ததால், 8ஆம் வகுப்பு படித்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

suicide
suicide

By

Published : Nov 24, 2020, 9:50 PM IST

சென்னை : சென்னை அமைந்தகரை பி.பி.கார்டன் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பரந்தாமன். இவரது மகள் மாலதி (14). அதே பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், சிறுமி மாலதி அவரது உறவினர் வீட்டிற்குச் சென்று பணம் திருடியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, சிறுமியை அவரது தாய் கோமதி கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த சிறுமி மாலதி, நேற்று இரவு படுக்கை அறைக்கு சென்று மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாலதியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர், மாலதியை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எண்ணத்தை கைவிடுக

இதையும் படிங்க:இரும்புக் கதவில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி

ABOUT THE AUTHOR

...view details