இது குறித்து டெல்லி காவல் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக அனைத்தும் ஆன்லைனில் நடைபெற்றதால், சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன.
இதில் 2020ஆம் ஆண்டில் சைபர் கிரைம் புகார்களில், சுமார் 62 விழுக்காடு நிதி மோசடிகள், 24 விழுக்காடு ஆன்லைன் துன்புறுத்தல், மீதமுள்ள 14 விழுக்காடு ஹேக்கிங், தரவு திருட்டு தொடர்பான குற்றங்களாகப் பதிவாகியுள்ளன.