தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

ஆசிரியர் வீட்டில் “அபேஸ்” - காவல்துறை விசாரணை! - குற்ற வழக்குகள்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே பூட்டியிருந்த ஆசிரியரின் வீட்டில் பின்புறமாகக் கதவை உடைத்து 61 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

காவல்துறை விசாரணை
காவல்துறை விசாரணை

By

Published : Oct 2, 2020, 7:28 PM IST

தஞ்சாவூர்: திருவையாறு அடுத்த பொன்னாவரைப் பகுதியில் வசித்து வரும் ஆசிரியரின் வீட்டில் இருந்த 61 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

திருவையாறு அடுத்த பொன்னாவரை ரோடு, கோதண்டராமன் நகரில் வசித்துவருபவர் வேலாயுதம் மகன் சுதாகர்(40). இவர் வளப்பக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார். இவருக்கு தீபவாணி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளன.

இவர் நேற்று (அக்.1) மதியம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு, திருவாரூர் கமலாபுரத்தில் உள்ள மாமியார் வீட்டு சுபநிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, இரவு சுமார் 7 மணியளவில் வீட்டிற்கு வந்து வீட்டின் கதவை திறந்து உள்ளே பார்க்கும் போது, பின்புற கதவு திறக்கப்பட்டு பீரோ திறந்து கிடந்தது. பின்னர் சோதனை செய்ததில் பீரோவிலிருந்த 61 பவுன் நகை மாயமானது தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்த திருவையாறு காவல் துறை டிஎஸ்பி சித்திரவேல், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, திருவையாறு காவலர்கள் கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: வாட்ஸ்அப் துணிக்கடை - பெண்களை ஏமாற்றியவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details