திருவள்ளூர் அருகே கொத்தியம்பாக்கம் கிராமத்தில் தனியார் ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஒடிசாவைச் சேர்ந்த ஹமீது கர்சாய் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 4 வயதில் ஹாசினி என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த சிறுமி திடீரென காணாமல் போன நிலையில், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள முட்புதர் ஒன்றில் இருந்து முகத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், சிறுமி கொலை செய்யப்பட்டாரா? சிறுமியை யாரேனும் வன்புணர்வு செய்தனரா? என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டதோடு, தொழிற்சாலையில் வேலை பார்க்கும் நிராக்கர், சந்திரபானு ஆகியோரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தும் விசாரித்தனர்.
நிராக்கர்- மாற்றுத்திறனாளி சிறுமி ஆனால், இங்கு நடந்திருப்பதே வேறு என்று அவர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது, ஜூலை 14ஆம் தேதி நிராக்கர் மது அருந்திகொண்டிருந்தபோது, அவரிடம் சிறுமி சிக்கன் பகோடா கேட்டிருக்கிறார். அவர் தர மறுத்ததால் சிறுமி அவர் கையை கடித்திருக்கிறார், இதனால் ஆத்திரத்தில் சிறுமியை நிராக்கர் தள்ளியதில் பாலத்தில் முகம் அடிபட்டு சிறுமி பாலியாகியுள்ளார். இதனால் பதற்றமடைந்த நிராக்கர், சிறுமி பாலத்தில் இருந்து தவறி விழுந்தது போல் செட்டப் செய்துவிட்டு ஒன்னுமே நடக்காததுபோல் கமுக்கமாக தன் வேலையை பார்க்கத் தொடங்கியுள்ளார்.
இந்த தகவல்கள் அனைத்தையும் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்து வாங்கியுள்ள காவல்துறையினர், சிக்கன் பகோடாவுக்காக சிறுமியை கொலை செய்த அந்த பலே ஆசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.