அசாம் மாநிலம் நியூ பங்க் ஐகான் பகுதியிலிருந்து வந்த ரயில், இன்று காலை 11 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தது. இந்த ரயிலில் இருந்து இறங்கிய வடமாநிலத்தை சேர்ந்த மூன்று பேர், நடைமேடையில் சந்தேகத்திற்கிடமாக கையில் பையுடன் நடந்து சென்றுள்ளனர்.
அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே காவல்துறையினர், அவர்கள் மூவரிடம் இருந்த பைகளை சோதனை செய்ததில், சுமார் 38 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.