தருமபுரி: சட்டவிரோதமாக நடந்துவரும் மதுவிற்பனை தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் மூன்று ஆண்டுகளாக மதுபானக் கடைகள் இல்லாமல் இருந்தது. தற்போது ஒரு மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. மதுபானக் கடை திறக்கப்பட்டதால் சிலர் மதுபானங்களை ஒட்டுமொத்தமாக வாங்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்.
டாஸ்மாக் மதுபானக் கடை காலை 10 மணிக்கு திறக்கப்படுவதால், மதுபிரியர்கள் காலை 6 மணி முதலே கள்ளத்தனமாக மதுபானங்களை வாங்கி பேருந்து நிலையத்திலேயே அமர்ந்து அருந்தி வருகின்றனர். 50 ரூபாய்க்கு 90மில்லி முதல் புல் குப்பி 750 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
சட்டவிரோத மதுபான விற்பனை குறித்த வைரல் காணொலி அரசுக்கு தெரியாமல் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது. மது பாட்டில்களை விற்பனை செய்வதும், மது பிரியர்கள் பேருந்து நிலையத்தில் மது அருந்துவதும் போன்ற காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.