மதுரை: கடந்த 24 மணிநேரத்தில் மாவட்டத்தில் இரண்டு கொடூர கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சாக்ரடீஸ் என்ற தேவா முன்விரோதம் காரணமாக நேற்று மாலை சொக்கலிங்க நகர் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் துவரிமான் அருகேயுள்ள சுடுகாட்டு பகுதியில் வீசப்பட்டிருந்தது. இதுகுறித்து, நாகமலை புதுக்கோட்டை காவல் துறையினர் வழக்கினை விசாரித்து வருகின்றனர்.
தொடர்ச்சியாக, நேற்று (அக்.10) காலை பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பாண்டிகோயிலில் பூசாரிக்கு, உதவியாக இருக்கும் முத்துராஜ் என்பவரை அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தனர்.