நியூயார்க்: இணைய தேடுபொறியில் நம்பர் ஒன் மற்றும் நம்பகத்தன்மை கொண்ட நிறுவனமாக கூகுள் விளங்குகிறது. பல நேரங்களில் கூகுள் நிறுவனமும் பயனர்களின் ரகசிய தகவல்களை, அவர்களது அனுதியின்றி சேகரிப்பது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களை செய்து வழக்குகளில் சிக்கி அபராதம் செலுத்தி வருகிறது.
கடந்த மாதம் கூட ஆண்ட்ராய்டு பயனர்களின் இருப்பிடத் தரவுகளை அனுதியின்றி கூகுள் கண்காணித்ததாக அமெரிக்காவின் அரிசோனா மாகாண நீதிமன்றம் 85 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்தது. அரிசோனாவை தொடர்ந்து, 40 மாகாணங்களில் கூகுள் நிறுவனம் இதே போன்று பயனர்களின் தரவுகளை சட்டவிரோதமாக கண்காணித்தாக புகார்கள் எழுந்தன. செல்போன்களில் உள்ள லொகேஷனை பயனர்கள் முடக்கிய போதும், அவர்களுக்கே தெரியாமல் கூகுள் அதன் தரவுகளை சேகரித்து வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.