வாஷிங்டன் (அமெரிக்கா):இந்த உலகத்தில் எதுவுமே இலவசமாக வராது என ட்விட்டரின் புதிய தலைமைச் செயல் அலுவலரான எலோன் மஸ்க் இந்த வாசகத்தை சீரியஸாக எடுத்துக்கொண்டார் போலிருக்கிறது. The Vergeஇன் அறிக்கையின்படி, புதிய Twitter Blue டிக் சந்தாவிற்குப் பயனர்களிடமிருந்து USD 19.99 (ரூ 1600 க்கு மேல்) வசூலிக்க எலோன் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.
இது ட்வீட்களைத் திருத்துதல் மற்றும் அழித்தல் போன்ற கூடுதல் அம்சங்களைக்கொண்டு வருகிறது. தற்போதைய திட்டத்தின்கீழ், சரிபார்க்கப்பட்ட பயனர்களுக்கு அவர்களின் நீலநிற சரிபார்ப்பு அடையாளத்தைப் பெற 90 நாட்கள் அவகாசம் தரப்படும். அதற்குள் அவர்கள் உரிய சந்தா செலுத்தவில்லையென்றால், ப்ளூ டிக் அடையாளத்தை இழக்க நேரிடும்.
ப்ளூ டிக் தொடர்பான திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் இந்த அம்சத்தை முடித்துக்கொடுக்க, நவம்பர் 7ஆம் தேதி வரை காலக்கெடுவாகும்; அதனை முடிக்கவில்லையென்றால், அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் அதன் பயனர் சரிபார்ப்பு செயல்முறையை மறுபரிசீலனை செய்யும் என்று மஸ்க் ஒரு ட்வீட்டில் குறிப்பிட்ட அறிக்கை வருகிறது. எனினும், குற்றச்சாட்டுகள் தொடர்பான எந்த விவரங்களையும் அவர் தெரிவிக்கவில்லை. முழு சரிபார்ப்பு செயல்முறையும் இப்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது, என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.