சான் ஃபிரான்சிஸ்கோ(அமெரிக்கா): ட்விட்டர், அமேசான், ஹெச்பி உள்ளிட்ட நிறுவனங்கள் அண்மைக்காலமாக ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல், கூகுள், மெட்டா, சிஸ்கோ, இன்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பெரிய அளவில் ஆட்குறைப்பு செய்யத் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகின. இருப்பினும் கூகுள், ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் ஆட்குறைப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட், குறைந்த செயல்பாடுகள் கொண்ட 6 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்யத் தயாராகி வருவதாகவும், இந்த ஆண்டில் புதிதாக வேலைக்கு ஆட்களை சேர்க்கும் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.