சான் பிரான்சிஸ்கோ:இது தொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனர் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்த வாரம் முதல் JSX ஏர்வேஸ்க்கு சொந்தமான விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு, அதிவேகத்துடனும் குறைந்த தொய்வுடனும் கூடிய இணைய சேவையை ஸ்டார்லிங்க் தொடங்கியுள்ளது. எனவே, நீங்கள் (பயணிகள்) விமானத்தில் ஏறியதும், இணைய சேவையும் உங்களுடனேயே இயங்கத் தொடங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
JSX ஜெட்டில் அறிமுகமாகியது எலான் மஸ்க்கின் இணைய சேவை! - JSX Airways
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், JSX ஜெட்டில் தனது இணைய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
JSX ஜெட்டில் அறிமுகமாகியது எலான் மஸ்க்கின் இணைய சேவை!
முன்னதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் மூலம் கடந்த செப்டம்பரில் 100 எம்பிபிஎஸ் (Mbps) வேகத்துடன் இயங்கக்கூடிய இணைய சேவை, ஒரு விமானத்தில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. இந்த நிலையில் விமானத்தில் வழங்கப்படும் அதிவேகமான இணைய சேவைக்கு, பலரும் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:வாட்ஸ்அப்பில் "டிஜிட்டல் அவதார்" - மார்க் ஜுக்கர்பெர்க் அறிவிப்பு!