இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியில் நிலவி வரும் நிலையில் , அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலக கோரி இளைஞர்கள் , எதிர்க்கட்சியினர் , பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் இந்த நிலையில் இன்று அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு , அங்கிருந்த தடுப்பு வேலிகளை அகற்றி உள்ளே சென்று கைப்பற்றினர். இதனிடையே அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து நாட்டில் அனைத்து கட்சி அடங்கிய அரசு அமைந்து , பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டவுன் ரணில் ராஜினாமா செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கே மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:இலங்கையில் நெருக்கடி: அதிபர் மாளிகை முற்றுகை... போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு...