தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஒரே நாளில் 37 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு.. இலங்கை கடற்பரப்பில் சீன கப்பல் உளவு பார்க்கிறதா? என்ன நடக்கிறது?

Tamilnadu fishermans arrest: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 37 மீனவர்கள் மற்றும் 5 விசைபடகுகளை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ள நிலையில், அவர்களை மீட்கக் கோரி உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 37 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 37 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 3:04 PM IST

கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரே நாளில் அடுத்தடுத்து 37 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை கடற்பரப்பில் ஆய்வு கப்பல் என்ற பெயரில் சீனாவின் உளவுக் கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (அக். 28) மாலையில் இருந்து இலங்கை கடற்படையினர், இலங்கையின் பல்வேறு கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அப்போது, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து தமிழக மீனவர்களின் மூன்று படகுகளையும் அதில் இருந்த 23 மீனவர்களையும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர். அதேபோல் நேற்று (அக். 28), நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மேலும் 2 படகும் அதில் இருந்த 14 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 14 ஆம் தேதியில் இருந்து நேற்று (அக். 28) மாலை வரை இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 10 விசைப்படகுகளும் அதில் இருந்து 64 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக மீனவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தொடர்ந்து மீனவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் மவுனம் காக்கும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க:அதிமுக - பாஜக பிளவு முதல் சாதிவாரி கணக்கெடுப்பு வரை.. ஈடிவி பாரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பிரத்யேக பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details