கேப் கனவரல் :சவுதி அரேபியன் முதல் பெண் வீராங்கனை ரயனா பார்ணவி ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றார். விண்வெளி ஆராய்ச்சியில் சவுதி அரேபியா ஈடுபட்டு வருகிறது. அதற்காக விண்வெளி வீரர், வீராங்கனைகளை அடங்கிய குழுவை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்டது.
சவுதி அரேபிய அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தில், நாசாவில் பணியாற்றிய ஓய்வு பெற்ற விண்வெளி வீரர், திட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்தார். இந்த திட்டத்தில் அமெரிக்க தொழிலதிபர், சவுதி அரேபியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை ரயனா பார்ணவி உள்ளிட்ட 4 பேர் பயணம் செய்தனர்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல மில்லியன் டாலர் மதிப்பிலான ராக்கெட்டில் 4 பேரும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். சர்வதேச விண்வெளி மையத்தை 4 பேரும் அடைந்த நிலையில், ஒரு வார காலம் அங்கேயே தங்கி இருந்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளதாக சவுதி அரேபியா அரசு தெரிவித்து உள்ளது.
உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியாளரான ரயனா பார்ணவி, அரபிய நாடுகளில் இருந்து விண்வெளிக்கு சென்ற முதல் பெண் என்ற சிறப்பை பெற்றார். ஸ்டெம் ஷெல் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக அவர் விண்வெளிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவருடன் சேர்ந்து சவுதி அரேபியா விமானப் படை வீரர் அலி அல் கர்னியும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று உள்ளார்.
1985 ஆம் ஆண்டுக்கு பிறகு சவுதி அரேபியா விண்வெளி ஆராய்ச்சிக்காக முதல் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. இதற்கு முன் கடந்த 1985 ஆம் ஆண்டு டிஸ்கவரி ஸ்பேஸ் ஷட்டில் என்ற ராக்கெட்டை சவுதி அரேபியா விண்ணில் செலுத்தி இருந்தது. மேலும், விண்வெளிக்கு தனியார் ராக்கெட்டில் சென்ற இரண்டாவது வீரர்கள் குழு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு கடந்த ஆண்டு நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர், மற்றும் மூன்று தொழிலதிபர்கள் அடங்கிய குழு விண்வெளிக்கு சென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு வார பயணத்திற்கு பின் அமெரிக்காவின், புளோரிடா மாகாண கடற்பகுதியில் இந்த விண்வெளி ஆராய்ச்சிக் குழு தரையிறங்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பயணம் தனிப்பட்டை முறையில் மேற்கொள்ளப்படுவதால் அதற்கு ஏற்றார் வகையில், பயணம் மேற்கொண்டவர்களுக்கான கட்டண செலவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் வீரர், வீராங்கனைகளை விண்வெளிக்கு அனுப்பிய தனியார் விண்வெளி நிறுவனமான அக்சியம் ஸ்பேஸ், பயணத்திற்கான கட்டண விவரங்களை வெளியிட மறுத்துவிட்டது.
இருப்பினும் தனியார் நிறுவனங்கள் வெளியிட்டு உள்ள தகவலின் படி ஒரு நபருக்கு 55 மில்லியன் டாலர் வரை பணம் வசூலிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்த 4 பேர் கொண்ட குழுவில் ஒரு தொழிலதிபரும், சவுதி அரேபியா அரசின் நிதி உதவியுடன் மூன்று பேரும் செல்வது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :2024ஆம் ஆண்டில் இந்தியாவில் குவாட் உச்சி மாநாடு - பிரதமர் மோடி மகிழ்ச்சி!