தென்னாப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்-கொய்தா அமைப்பின் தாக்குதல்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் சோமாலியா தலைநகர் மோகாதிஷுவில் நேற்று (அக் 30) 2 கார்கள் மூலம் குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டது. இதில் சிக்கி 100 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ஹசான் ஷேக் முகம்மது தெரிவித்துள்ளார்.
சோமாலி: கார் குண்டுவெடிப்பில் 100 பேர் உயிரிழப்பு - hundred killed in Saturday attack
சோமாலியில் நடைபெற்ற 2 கார் குண்டுவெடிப்புகளில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.
சோமாலி: கார் குண்டுவெடிப்பில் 100 பேர் உயிரிழப்பு
மேலும், “அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய அல்-அஷாப் உடன் சோமாலியா தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. நாங்கள் வெற்றி பெறுவோம்” என்றும் அதிபர் தெரிவித்துள்ளார். முன்னதாக இதே இடத்தில் 2017 அக்டோபரில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கென்யாவில் 2 இந்தியர்கள் முன்னாள் சிறப்புப்படை போலீசாரால் சுட்டுக்கொலை