தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - உயிர் தப்பிய ஓட்டுநர்! - பேருந்து விபத்து

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாலத்தில் இருந்து 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் ஓட்டுநர் உள்பட இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

பஸ்
பஸ்

By

Published : Dec 26, 2022, 4:11 PM IST

கிளாசியா(ஸ்பெயின்):ஸ்பெயினின் வடமேற்குப் பகுதியில் கிளாசியா என்ற தன்னாட்சி நகரம் உள்ளது. கிளாசியா நகரில் லெரெஸ் நதி பாய்கிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஸ்பெயின் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பயணிகள் பேருந்து லெரெஸ் நதியின் மேல் உள்ள பாலத்தில் சென்றுள்ளது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் ஈடுபட்டு வந்த நிலையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தின் தடுப்பில் மோதி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர், பேருந்தில் உயிருடன் இருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆற்றின் நீரோட்டத்திற்கு இடையே கயிறு கட்டி கீழ் இறங்கிய வீரர்கள், பேருந்தில் இருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். குழந்தைகள் உள்பட ஏறத்தாழ 6 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக பேருந்தின் ஓட்டுநர் மற்றும் பெண் பயணி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.

இருவரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஓட்டுநரின் தகவல் படி பேருந்தில் 9 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. ஆனால், 6 பேரின் சடலங்களை மட்டுமே மீட்புக் குழுவினர் கைப்பற்றி உள்ளதால் காணாமல் போன நபர் குறித்து ஸ்பெயின் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் முதற்கட்ட விசாரணையில் மோசமான வானிலை காரணமாக பேருந்து விபத்துக்குள்ளானதாகவும், ஓட்டுநர் குணமடைந்ததும் அடுத்தகட்ட விசாரணையினை நடத்த உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இதையும் படிங்க:தினசரி கரோனா பாதிப்புகளை மறைக்கும் சீனா

ABOUT THE AUTHOR

...view details