ஒட்டவா (கனடா):கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள மிசிசாகா நகரில் சனிக்கிழமை இரவு இளம் பெண்னை மர்ம ஒருவர் சுட்டுக் கொன்றார். பீல்ஸ் பிராந்திய காவல்துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, பலியானவர் பிராம்ப்டனில் வசித்து வந்த சீக்கிய பெண்ணான பவன்ப்ரீத் கவுர் (21) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கனடா செய்திதாளின் படி, பவன்ப்ரீத் கவுர் ஒரு எரிவாயு நிலையத்திற்கு வெளியே சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இரவு 10:39 மணியளவில் ஒரு பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் காயமடைந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.