ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே. இவர் 2012 முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஜப்பானின் பிரதமராக பணியாற்றினார்.
அந்நாட்டின் நரா என்ற நகரத்தில் ஷின்சோ அபே இன்று (ஜுலை 8) நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். சாலை பகுதியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் அபே பேசிக்கொண்டிருந்தபோது அவர் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அபே மீது சுட்டார். இதில், துப்பாக்கிக்குண்டு அபேயின் மார்பில் பாய்ந்தது. இதனால், அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.
இதையடுத்து, அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்து மயங்க நிலையில் இருந்த ஷின்சோ அபேயை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அவர் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: விவோ மொபைல் ஃபோன் நிறுவனங்களில் ரெய்டு: நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என சீனா நம்பிக்கை!