காத்மாண்டு:நேபாளத்தில் தொடர் கனமழை பெய்துவருகிறது. அதன் காரணமாக அச்சம் மாவட்டத்தில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஐந்து பேர் காணமால் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
நேபாளத்தில் நிலச்சரிவு... 17 பேர் உயிரிழப்பு... - seventeen killed in landslides in Nepal
நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அச்சம் போலீசார் தரப்பில், "நிலச்சரிவுகளில் சிக்கியவர்களின் உடல்களை பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டனர். 11 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் ராணுவத்தினரும் இணைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. அதோடு மருத்துமவமனையில் 3 பேரின் உடல் நிலை கவலைக் கிடமாக உள்ளதால் அவர்களை விமானம் மூலம் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகள்... காட்டுக்குள் விடுவித்தார் பிரதமர் மோடி