சூடான்: ஆப்பிக்காவின் நைல் நதி மாகாணத்தில் பருவமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மே மாதம் முதல் பெய்துவரும் தொடர் மழை காரணமாக இதுவரை 38,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த மாதம் மட்டும் கஸ்ஸாலா, தெற்கு டார்பூர், மத்திய டார்பூர், தெற்கு கோர்டோபான், ஒயிட் நைல் பகுதிகளில் மட்டும் 2,500 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த முழுத் தகவல்கள் வெளியாகவில்லை.
கிழக்கு சூடானில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின - Sudan disaster
கிழக்கு சூடானில் பருவமழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கின
ஆனால் ஒயிட் நைல் பகுதியில் 2 குழந்தைகளும், டார்பூர் பகுதியில் 6 பேரும் உயிரிழந்ததாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த மாதம் இதே மாகாணத்தில் 2,800 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. 12 பேர் உயிரிழந்தனர். அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சூடானில் வெள்ளத்தால் 3,14,000-க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சூடானில் பருவமழை ஆண்டுதோறும் மே மாதம் முதல் செப்டம்பர் வரை பெய்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தாய்லாந்து சென்றார் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே!