தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, பிரேசில் நிரந்தர உறுப்பினராக ரஷ்யா முழு ஆதரவு! - ஐநா பொதுச்சபை கூட்டம்

இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக ரஷ்யா ஆதரவு தெரிவிப்பதாக ஐ.நா.வில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

russia
russia

By

Published : Sep 25, 2022, 3:19 PM IST

நியூயார்க்: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும், பத்து தற்காலிக உறுப்பினர்களும் உள்ளனர். ரஷ்யா, பிரிட்டன், சீனா, ஃபிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.

நிரந்தர உறுப்பினர்களாக உள்ள நாடுகளுக்கு வீட்டோ என்ற அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, பிற நாடுகள் தங்கள் நாடுகள் மீது கொண்டுவரும் தீர்மானங்களை ரத்து செய்ய முடியும். இந்த அதிகாரத்தைப் பெற வேண்டும் என்பதற்காக இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கு முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் நிரந்தர உறுப்பினர்களுக்கான எண்ணிக்கையை அதிகரிக்க ஐ.நா. திட்டமிட்டிருந்தது. இதைப் பயன்படுத்தி நிரந்தர உறுப்பினராகிவிட வேண்டும் என இந்தியா தீவிரமாக முயற்சித்து வருகிறது.

இந்த நிலையில், 77ஆவது ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக தகுதி உடையவர்கள் என்றும், இந்நாடுகளுக்கு ரஷ்யா ஆதரவு தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

அப்போது, தென்னாப்பிரிக்காவுக்கு ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை? என செர்ஜியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், இந்தியாவும், பிரேசிலும் பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற வேண்டும் என்பதற்காக தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள் என்றும்; அதற்கான அனைத்து தகுதியும் இருப்பதால் அந்நாடுகளுக்கு ஆதரவு தெரிவித்தோம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தியா உடன் அமைதியைத்தான் விரும்புகிறோம் - பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷரீஃப்


ABOUT THE AUTHOR

...view details