தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அதிகரிக்கும் பேட்டரி விபத்து.. நீரின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள புதிய பேட்டரி..

ஜிங்க் - அயர்ன் என்கிற நீரின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள புதிய பேட்டரியை ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர்.

அதிகரிக்கும் பேட்டரி விபத்து.. நீரின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள புதிய பேட்டரி..
அதிகரிக்கும் பேட்டரி விபத்து.. நீரின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள புதிய பேட்டரி..

By

Published : Nov 3, 2022, 11:59 AM IST

நவீன யுகத்தில் நாம் பயன்படுத்தும் மொபைல் போன்கள், கணினிகள் போன்ற சில எலக்ட்ரானிக் பொருட்களில் லித்தியம் - அயர்ன் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது கரிம எலக்ட்ரோலைட்டுகளைக் கொண்டுள்ளதால், சில சமயங்களில் தீ பற்றுகிறது.

இந்த நிலையில் தென் கொரியாவின் போஹாங்க் யுனிவர்சிட்டி ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் அறிவியல் முனைவர் பட்ட மாணவர் ஷாங்கியோப் லீ, பேராசிரியர் சூஜின் பார்க் மற்றும் வேதியியல் துறையின் ஃபெலோவானா கியூஜின் சாங் ஆகியோரின் ஆராய்ச்சியின் முடிவில் நீரில் இயங்கும் பேட்டரி உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆக்வாஸ் ஜிங்க் - அயர்ன் பேட்டரி என பெயரிடப்பட்டுள்ளது. இதில் துத்தநாக அனோடின் குறைந்த மீள்தன்மை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நீரானது எலக்ரோலைட்கள் இடம் பெயர்வதற்கான ஒரு வழியாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த முழு ஆராய்ச்சி அறிக்கை செல் ரிப்போர்ட்ஸ் பிசிக்கல் சயின்ஸ் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:செவ்வக தோசை சாப்பிட ரெடியா..! உலகின் முதல் ஸ்மார்ட் தோசை மேக்கர்..!

ABOUT THE AUTHOR

...view details