மாஸ்கோ: தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தை விரிவாக்கம் செய்ய இந்தியா-ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது! 5 நாள் பயணமாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா சென்றுள்ள நிலையில், ஒப்பந்தம் கையெழுத்தானது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை 2024-ல் ரஷ்யாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.இது தொடர்பாக, அந்நாட்டு ஊடகங்கள் நேற்று செய்திகள் வெளியிட்டுள்ளன.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்ய அதிபர் விளாடிமின் புதினை கிரம்ளினில் நேற்று சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையேயான உரையாடலில், 'ரஷ்யாவில் எங்களது நண்பரான நரேந்திர மோடியை காண்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி தரும்' என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு ஐந்துநாள் பயணமாக சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முன்னதாக, ரஷ்ய பிரதமர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்துப் பேசினார்.
இதைத்தொடர்ந்து இருவரும் இணைந்து செய்தியாளர்களிடம் பேசினர். முதலில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 2024ஆம் ஆண்டு நடக்க உள்ள வருடாந்திர உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் சந்திக்க உள்ளதாக நம்பிக்கை தெரிவித்ததோடு, இந்த இரு நாட்டின் தலைவர்களும் அடிக்கடி தொடர்புக்கொண்டு பேசுவதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். இந்தியப் பிரதமருக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையிலான உச்சிமாநாட்டில் இரு தரப்புக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மையில் மிக உயர்ந்த நிறுவன உரையாடல் நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.