தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஷின்சோ அபேவின் மறைவு இந்தியாவுக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்பு - பிரதமர் மோடி உருக்கம் - இந்தியா ஜப்பான் நட்புறவு

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் மறைவு, இந்தியாவுக்கு ஈடு செய்ய இயலாத இழப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Prime
Prime

By

Published : Sep 27, 2022, 10:34 PM IST

டோக்கியோ:ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த ஜூலை 8ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கு மிக பிரமாண்டமான முறையில் நடத்த ஜப்பான அரசு திட்டமிட்டது. அதன்படி இன்று டோக்கியோவில் இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, ஷின்சோ அபேயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அதை தொடர்ந்து, ஜப்பானின் தற்போதைய பிரதமரான பிமியோ கிஷிடாவை மோடி சந்தித்து பேசினார். அப்போது ஷின்சோ அபே மறைவு குறித்து உருக்கமா பேசினார். அவர் கூறும்போது, "கடந்த முறை நான் ஜப்பான் வந்தபோது ஷின்சோ அபேவுடன் நீண்ட நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டேன். நான் இங்கிருந்து சென்ற பிறகு இப்படியொரு செய்தியை கேட்க நேரிடும் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை.

இந்தியா-ஜப்பான் இடையேயான நட்பு உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்துவதில் பெரும் பங்காற்றியது. இதற்காக இந்திய மக்கள் அனைவரும் தற்போது அபேவையும், ஜப்பானையும் நினைவில் வைத்துள்ளார்கள். இந்தியாவுக்கு அவரது இழப்பு ஈடு செய்ய இயலாதது. தற்போது உங்கள் தலைமையின்கீழ், இந்தியா - ஜப்பான் உறவுகள் மேலும் விரிவடைவதுடன், உயரும் என்று நான் நம்புகிறேன். உலகில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் நாம் சிறந்த பங்காற்ற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க: ஜப்பான் பிரமதமருடன் மோடி சந்திப்பு

ABOUT THE AUTHOR

...view details