தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய - சபாநாயகருக்கு இ - மெயில் மூலம் கடிதம் - Parliament Speaker through email

இலங்கையில் போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், கோத்தபய ராஜபக்சே பதவி விலகல் கடிதத்தை இமெயில் மூலம் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய - சபாநாயகருக்கு இமெயில் மூலம் கடிதம்
அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய - சபாநாயகருக்கு இமெயில் மூலம் கடிதம்

By

Published : Jul 15, 2022, 9:17 AM IST

Updated : Jul 15, 2022, 9:34 AM IST

கொழும்பு: இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன்ன் நேற்று(ஜூலை 14) வெளியிட்ட தகவலில், ‘இலங்கை அதிபர் கோத்பய ராஜபக்சே இமெயில் மூலம் அனுப்பிய ராஜினாமா கடிதம் கிடைத்துள்ளது. மேலும் இது குறித்து முறையான அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு கிடைத்த ஆவணத்தின் சட்டபூர்வமான தன்மையை சரிபார்க்கப்படும் என பாராளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த ஆவணங்களை சரிபார்த்தபின் முழுமையான தகவல் இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்கு கோத்தபயவின் ராஜினாமா கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சபாநாயகரின் ஊடக செயலாளர் இந்துனில் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மாலத்தீவு முன்னாள் அதிபர் ட்வீட்:இலங்கை அதிபர் ராஜபக்சே ராஜினாமா செய்ததை மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷித் அவரது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். நஷித்தான் ராஜபக்சேவை மாலத்தீவுக்கு தப்பி வர பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது ட்விட்டரில், ‘ இலங்கை தற்போது முன்னேற முடியும் என்று நான் நம்புகிறேன். அதிபர் இன்னும் இலங்கையில் இருந்திருந்தால் ராஜினாமா செய்திருக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன், மேலும் அவர் உயிரிழக்க நேரிடும் என்ற பயத்தில் மட்டும் இதனை செய்திருக்க மாட்டார். மாலத்தீவு அரசாங்கத்தின் சிந்தனைமிக்க நடவடிக்கைகளை நான் பாராட்டுகிறேன். இலங்கை மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்" என ட்வீட் செய்துள்ளார்.

கோத்தபய ராஜபக்சே அவரது அதிபர் பதவியை ஜூலை 13ஆம் தேதி ராஜினாமா செய்வதாக முன்னர் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, ராஜினாமா கடிதத்தில் ஜூலை 12 அன்றே அவர் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவர் அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறிய பின்னர், அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே ஜூலை 13 அன்று இலங்கையில் இருந்து வெளியேறிவிட்டதாக குடியேற்ற அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புதிய தலைவர்கள் தேர்வு:இலங்கையின் அரசியல் கட்சிகள் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. வரும் ஜூலை 20 அன்று புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதன் மூலம் நாடு அடைந்துள்ள மோசமான நிலையை மீட்க உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் படி, ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் பதவி விலகினால், அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் சபாநாயகர் தற்காலிக ஜனாதிபதியாக பதவி வகிப்பார். இதனிடையே இலங்கை இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு கடனைத் திருப்பிச் செலுத்தாததால் ஏற்பட்ட கடுமையான கடன் நெருக்கடியால் இலங்கை திணறியது. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டுக்குள் செலுத்த வேண்டிய சுமார் 25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டிய நிலையில் இலங்கை உள்ளது. இந்த ஆண்டு திருப்பிச் செலுத்த வேண்டிய கடனாக கிட்டத்தட்ட 7 பில்லியன் அமெரிக்க டாலர திருப்பிச் செலுத்துவதை நிறுத்துவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 51 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இலங்கையில் அவசரநிலை பிரகடனம்- தப்பி ஓடிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

Last Updated : Jul 15, 2022, 9:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details