லண்டன்:இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டு காலம் இருந்த இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8 ஆம் தேதி காலமானார். அவரது இறுதி சடங்கில் பங்கேற்ப உலக தலைவர்கள் லண்டன் சென்றுள்ளனர். அந்த வகையில் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு லண்டன் சென்றுள்ளார். அவருக்கு செப் 18ஆம் பக்கிங்ஹாம் அரண்மனையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, மன்னர் சார்லஸ் சந்திப்பு - Buckingham Palace
பக்கிங்காம் அரண்மனையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்தார்.
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்தார் குடியரசுத்தலைவர் முர்மு
அப்போது மன்னர் மூன்றாம் சார்லஸை முர்மு சந்தித்தார். முன்னதார முர்மு ராணியின் இரங்கல் புத்தகத்தில் இந்திய மக்களின் அஞ்சலியை எழுதினார். வெஸ்ட் மினிஸ்டர் ஹாலில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இன்று நடைபெறவுள்ள நல்லடக்க நிகழ்விலும் கலந்துகொள்ள உள்ளார்.
இதையும் படிங்க:இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் உடல் இன்று நல்லடக்கம் - உலக தலைவர்கள் பங்கேற்பு