ஜகர்த்தா: இதுகுறித்து இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் உள்ள மாம்பெரமோ மாவட்டத்தின் வடமேற்கே 37 கிமீ தொலைவில் 16 கிமீ ஆழத்தில் நான்கு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவை முறையே 6.2 மற்றும் 5.5 ரிக்டர் அளவில் பதிவாகின. இந்த நிலநடுக்கங்களால் சுனாமி அபாயம் கிடையாது. அதோடு சேதமோ, உயிரிழப்போ பதிவாகவில்லை. அதிகாலையில் ஏற்பட்டதால் பெரும்பாலான பகுதிகளில் உணரப்படவில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் அடுத்தடுத்து நான்கு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சுமார் 12 லட்சம் மக்கள்தொகை கொண்ட பப்புவா மாகாணம் இந்தோனேசியாவின் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாகாணங்களில் ஒன்றாகும். இந்தோனேசியாவில் நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், சுனாமிகளால் அடிக்கடி ஏற்படும். கடந்த பிப்ரவரியில், மேற்கு சுமத்ரா மாகாணத்தில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 25 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: பிரிட்டன் மன்னராகிறார் மூன்றாம் சார்லஸ்