தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சிட்னியில் பிரதமர் மோடி - ஆஸ்திரேலிய நாட்டின் முன்னணி சி.இ.ஓ.,க்களுடன் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது, அந்நாட்டின் பிரதமர் அந்தோணி அல்பேனீஸ் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

PM Modi kickstarts Sydney visit, meets Australian CEOs
சிட்னியில் பிரதமர் மோடி - ஆஸ்திரேலிய நாட்டின் முன்னணி சி.இ.ஓ.,க்களுடன் சந்திப்பு!

By

Published : May 23, 2023, 11:07 AM IST

சிட்னி (ஆஸ்திரேலியா): மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக, ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பசுமை ஆற்றல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான Fortescue Future Industries-இன் தலைமை செயல் அதிகாரியை சந்தித்துப் பேசினார்.

ஆஸ்திரேலியாவின் முன்னணி தொழிலதிபரான ஜான் ஆண்ட்ரூ போரஸ்ட். இவர் Fortescue Metals Group (FMG) நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி (தற்போதைய செயற்குழு தலைவர்) ஆக உள்ளார். இவர், சுரங்கத் தொழில் மற்றும் கால்நடைப் பிரிவுகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக உள்ளார். அந்நாட்டின் பைனான்சியல் மறுமதிப்பீட்டின்படி, 2008ஆம் ஆண்டின் மிகப்பெரிய பணக்காரராக போரஸ்ட் திகழ்ந்து உள்ளார். பிரதமர் மோடி, ஆஸ்திரேலியன் சூப்பர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பால் ஸ்கோரடரையும் சிட்னி நகரில் சந்தித்துப் பேசினார்.

பால் ஸ்கோரடர், 2021ஆம் ஆண்டின், அக்டோபர் மாதத்தில், ஆஸ்திரேலியன் சூப்பர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார், மேலும் நிதித் தலைமை மற்றும் மூலோபாய வளர்ச்சி மற்றும் வாரியத்திற்கு ஆலோசனைகளை அவர் வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

பப்புவா நியூ கினியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாடுகளுக்கான பயணத்தின் மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டத்தின் ஒரு பகுதியாக சிட்னி நகருக்கு வந்தடைந்தார். சிட்னி வந்தடைந்த பிரதமர் மோடியை, இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய ஹை கமிஷனர் பேரி ஓ'ஃபாரல் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

இந்தப் பயணத்தின்போது, பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனிஸ் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது, இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகம், முதலீடு, விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பாதுகாப்பு மற்றும் அதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிப்பார்கள் என்று ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டு உள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடியை, "பாரத் மாதா கி ஜெய்" மற்றும் "வந்தே மாதரம்" கோஷங்களை எழுப்பியபடி புலம்பெயர்ந்த இந்திய உறுப்பினர்கள் வரவேற்றனர். மோடியின் இந்த பயணத்தின் போது, நமது பன்முக கலாசார சமூகத்தின் முக்கியப் பகுதியான ஆஸ்திரேலியாவின் ஆற்றல்மிக்க மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இந்திய புலம்பெயர்ந்தோரை கொண்டாடும் வகையில் சிட்னியில் நடைபெறும் சமூக நிகழ்வில் இரு நாட்டின் பிரதமர்களும் கலந்துகொள்வார்கள்” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, பொருளாதார ஒத்துழைப்பிற்கான உலகின் முதன்மையான அமைப்பாக திகழும் ஜி20 உச்சி மாநாடு, செப்டம்பர் மாதம் புதுடெல்லியில் நடைபெற உள்ளது. இதற்காக, இந்தியாவிற்கு வருகை தர மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அல்பேனீஸ் தெரிவித்து உள்ளார். இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவை விவரித்த பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர நம்பிக்கையானது, குறிப்பாக பாதுகாப்பு விஷயங்களில் இயற்கையாகவே அதிக ஒத்துழைப்பாக மாறியுள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.

“தி ஆஸ்திரேலியன்” ஊடகத்திற்கு, பிரதமர் மோடி பிரத்யேக பேட்டி அளித்து உள்ளார். அதில் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளதாவது, 'ஆஸ்திரேலியாவுடனான உறவை "அடுத்த கட்டத்திற்கு" உயர்த்த விரும்புகிறேன், இது "திறந்த மற்றும் சுதந்திரமான" இந்தோ - பசிபிக் அமைப்பை உருவாக்குவதற்கு ஆதரவளித்து, பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் என்றும் கூறினார். ''இந்த சவால்களை பகிரப்பட்ட முயற்சிகள் மூலம் மட்டுமே எதிர்கொள்ள முடியும் என்று இந்தியா நம்புகிறது. நெருக்கமான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உறவுகளின் "உண்மையான திறனை" உணர்ந்து, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முன்னேற வேண்டும்'' என்று பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: உலகளாவிய தெற்கின் குரலாக திகழும் பிரதமர் மோடி - FIPIC உச்சிமாநாட்டில் பப்புவா நியூ கினியா பிரதமர் புகழாரம்!

ABOUT THE AUTHOR

...view details