ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு தகுதி வழங்கும் சட்டப்பிரிவுகளை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி மத்திய அரசு திரும்பப்பெற்றது. அத்துடன் அம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதனையடுத்து மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் சட்டப்பேரவை அல்லாத லடாக் என்ற யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்ற தகுதிக்குள் கொண்டுவரப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாநிலத்தில் பல்வேறு சட்டவிதிகள் மற்றும் தடைகள் அமலுக்கு வந்தன. இணையம் மற்றும் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டது. ஸ்ரீநகர் உள்ளிட்ட அம்மாநிலத்தின் பல பகுதிகள் முள்வேலிகளால் சுற்றி வளைக்கப்பட்டன. நகரத்தின் முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
கடந்த ஓராண்டிற்கும் மேலாக இந்நிலை தொடர்கிறது. இதன் ஒரு பகுதியாக, அங்கு இணைய பயன்பாடுகளும் தடைசெய்யப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இதனை எதிர்த்து வரும் பாகிஸ்தான், இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீர் தங்களுக்குரியதென அந்நாடு கூறிவருகிறது.
எதிர்ப்பின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி," காஷ்மீர் பிரச்னை தொடர்பாக விவாதிக்க இஸ்லாமிய நாடுகளை ஒருங்கிணைக்கள் வேண்டும் என இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பை (ஓ.ஐ.சி) வலியுறுத்துகிறோம்.