தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி: காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்குப் பாதிப்பு? - பொருளாதார நெருக்கடி

பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித்தவித்து வரும் நிலையில், ஐ.நா. சபையில் ஜம்மு-காஷ்மீர் குறித்து அந்நாட்டின் தூதர் பேசியுள்ளார். இதற்கு இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் ஈடிவி நெட்வொர்க் எடிட்டர் பிலால் பாட்.

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி

By

Published : Feb 24, 2023, 6:32 PM IST

Updated : Feb 25, 2023, 12:15 PM IST

ஹைதராபாத்: உக்ரைன் மீது கடந்த ஓராண்டாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலில், உக்ரைனில் இருந்து ரஷ்ய ராணுவம் வெளியேற வேண்டும் என ஐ.நா. சபையில் உக்ரைன் தரப்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின்போது பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி முனீர் அக்ரம், ஜம்மு-காஷ்மீரை குறிப்பிட்டார். இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் பிரதிக் மாத்தூர், "பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் இருந்து வருகிறது. மோதல் மற்றும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு சமாதானமே ஒரே பாதையாக இருக்க முடியும் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொண்ட நேரத்தில், இத்தகைய பேச்சு வருந்தத்தக்கது" எனக் குறிப்பிட்டார். பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார நெருக்கடி அந்நாட்டையும், காஷ்மீர் பிரிவினைவாதிகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

பிரிவினை:1971-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் உருவானது. இதற்கு இந்தியா உதவி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்தியாவை பழிவாங்க முடிவு செய்த பாகிஸ்தான், 1980-ம் ஆண்டு காலிஸ்தான் இயக்கத்துக்கு ஆதரவு அளித்தது. எனினும், அந்த திட்டம் தோல்வி அடைந்தது. காஷ்மீரை சொந்தம் கொண்டாடி வரும் பாகிஸ்தான், 1980-ம் ஆண்டில் இருந்தே இவ்விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. காஷ்மீரை அபகரிக்க பலமுறை முயற்சி செய்துள்ளது.

காஷ்மீரை குறிப்பிடும் அரசியல்வாதிகள்:பாகிஸ்தான் அரசியல்வாதிகள் எப்போதுமே காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுக்கின்றனர். காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கும் இந்த அம்சம் உதவுகிறது. ஒட்டுமொத்த நாடும் கடும் நிதி நெருக்கடியை சந்திக்கும் நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பழைய பாணியை இன்னும் கடைபிடிக்கிறது.

பொருளாதாரம் சரிவு: நாட்டின் பொருளாதாரத்தை முறையாகப் பயன்படுத்துவதில் பாகிஸ்தான் தடுமாற்றம் கண்டுள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் பாகிஸ்தானில் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தனது நிதியின் பெரும் பகுதியை, ராணுவத்துக்காக செலவிடுகிறது. பாகிஸ்தானில் செயல்படும் கட்சிகள், காஷ்மீர் பிரிவினைவாதிகளையே நம்பியிருக்கிறது.

எந்த தலைவர்களும் அதற்கு எதிராகப் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஏராளமான தீவிரவாத இயக்கங்கள் காஷ்மீரில் செயல்படுகின்றன. இந்த இயக்கங்கள் காஷ்மீருக்குள் அதிகளவில் பணம் வந்து செல்ல உருவாக்கப்பட்டது.

பிரிவினைவாதிகளை பதம் பார்க்கும்: பாகிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம், இஸ்லாமாபாத் மற்றும் பிற இடங்களில் ரகசியமாக செயல்படும் பிரிவினைவாத இயக்கங்களை பராமரிப்பதற்கு சவாலை ஏற்படுத்தும். காஷ்மீர் கிளர்ச்சி இயக்கங்களுக்கு, பாகிஸ்தானிலும் பிரதிநிதிகள் உள்ளனர். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி, அவர்களை கடுமையாகப் பாதிக்கும்.

வறுமையில் மக்கள்:பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தானில் விலைவாசி விண்ணை முட்டுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை 30 சதவீதம் கூடுதலாக விற்கப்படுகிறது. 3-ல் ஒரு பங்கு மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். ஓரளவு வருமானம் பெறுவோரும், குடும்பத்துக்கான பொருட்களை வாங்கவே அதிகளவில் பணத்தை செலவிடுகின்றனர்.

ஐஎம்எப் நிபந்தனை:பாகிஸ்தானுக்கு கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் (IMF) பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. பணக்காரர்களுக்கான வருவாயின் மீது கூடுதல் வரிகளை விதிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. எனினும், கடன் வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. ஒருவேளை சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை பாகிஸ்தான் ஏற்றுக் கொண்டால், கடன் பெற்று, நிதி சிக்கலைத் தீர்க்கலாம்.

இதையும் படிங்க: சிபிஆர் செய்து காப்பாற்றப்பட்ட உயிர்.. போக்குவரத்து காவலருக்கு குவியும் பாராட்டு.

Last Updated : Feb 25, 2023, 12:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details