லாஹூர்: பாகிஸ்தானில் திருமண கோஷ்டி சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் மாகாணத்தில் நடந்த திருமண விழாவில் கலந்த கொண்டவர்கள்ம், அங்கிருந்து லாஹூருக்கு பேருந்து மூலம் பயணித்து உள்ளனர்.
கல்லர் கஹர் பகுதியில் சென்று கொண்டு இருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. சாலையில் தாறுமாறாக ஓடிய பேருந்து, கவிழ்ந்து எதிர்திசையில் சென்று கொண்டு இருந்த 3 வாகனங்கள் மீது மோதி, பள்ளத்தாக்கில் விழுந்தது. பேருந்து விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பள்ளத்தாக்கில் கிடந்த பேருந்தை வெட்டிய மீட்பு படையினர் பேருந்தினுள் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 11 பேர் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், ஏறத்தாழ 60க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.