காசா: கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதனையடுத்து, இஸ்ரேலும் தனது வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது. இவ்வாறு இரு தரப்பும், தொடர்ந்து இன்றும் (அக்.27) போரை முடிவுக்கு கொண்டு வரவில்லை.
இதற்கு ஐ.நா. சபை தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது மட்டுமல்லாமல், நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறது. இதனிடையே, இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அது மட்டுமல்லாமல், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ராணுவ உதவிகளையும் வழங்கி வருகிறது.
மேலும், அமெரிக்க பிரதமர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள், நேரடியாக இஸ்ரேலுக்குச் சென்று இஸ்ரேல் பிரதமர் மற்றும் அதிபர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதேநேரம், இந்தியா தரப்பில் பாலஸ்தீனத்துக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.