இஸ்லாமாபாத்: ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். இந்த கருத்துகளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. பாஜகவினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பாக போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் ஷாஜியா மர்ரி, பாகிஸ்தானிடம் அணு ஆயுதமிருப்பதை இருப்பதை இந்தியா மறந்துவிடக் கூடாது. தேவைப்பட்டால் பின்வாங்க மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நேற்று (டிசம்பர் 17) செய்தியாளர்களை சந்தித்த ஷாஜியா மர்ர, இந்திய அரசு போராடினால் பதில் கிடைக்கும் என்று நினைக்கிறது. இதுபோன்ற பதிலை பாகிஸ்தானுக்கும் சொல்ல தெரியும்.