இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹட்டன் மற்றும் டிக்கோயா நகரங்களில் டயர்களை எரித்து, வீதியினை மறித்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு நிலவுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று காலையில் இருந்து ஹட்டன் மற்றும் டிக்கோயா நகரப்பகுதியில் இளைஞர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தொடரும் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு போக்குவரத்து பாதிப்பு: ஹட்டன் மற்றும் பொகவந்தலாவ ஆகிய பிரதான வீதியினை மறித்தும், டயர்களை எரித்தும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஹட்டன், பொகவந்தலாவ பிரதான வீதி மற்றும் ஹட்டன், கொழும்பு, நுவரெலியா ஆகிய வீதிகளின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி: ரம்புக்கனையில் நடந்த போராட்டத்தில் போலீஸ்காரர்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டன. இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 11 பேர் கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிகிச்சைப்பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனைக் கேகாலை போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவமனை மிஹிரி பிரியங்கனி உறுதிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே ராஜினாமா!