தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ரஷ்யாவில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - வலுவடையும் இருநாட்டு உறவுகள்! - அமெரிக்கா

North Koreas Kim is in Russia: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் ரஷ்யப் பயணம், இரு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக அமையும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

North Koreas Kim is in Russia
North Koreas Kim is in Russia

By PTI

Published : Sep 12, 2023, 4:21 PM IST

சியோல்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அரசுமுறைப் பயணமாக, இன்று (செப் 12) ரஷ்யா சென்றடைந்து உள்ளார். இந்த பயணத்தினிடையே கிம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேச திட்டமிட்டு உள்ளார். இந்த சந்திப்பின் மூலம், மேற்கு நாடுகள் உடன் அதிகரித்து வரும் மோதலில், இருநாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் நாட்டிற்கு எதிரான போரின்போது, ரஷ்யா பயன்படுத்திய ஆயுதங்கள், ராணுவ தொழில்நுட்பங்கள் மற்றும் பொருளாதார உதவிகளை, அதிபர் புதின் உடனான சந்திப்பின்போது அதிபர் கிம் கேட்டுப் பெற உள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

அதிபர் கிம் ஜாங் உன், ஆளுங்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், நாட்டின் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் உடன் தனி ரயிலில் செப்டம்பர் 10ஆம் தேதி ரஷ்யாவிற்கு புறப்பட்டுச் சென்றதாக வடகொரிய நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியிட்டு உள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் உடனான சந்திப்பினிடையே உளவு செயற்கைக் கோள்கள், ஏவுகணைகளை தாங்கிச் செல்லும் திறன் மிக்க நீர்மூழ்கி கப்பல்கள உள்ளிட்டவைகளை வாங்கும் வகையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். புதின் உடனான சந்திப்பு சுமூகமாக நடைபெறும் வாய்ப்பு உள்ளபோதிலும் ரஷ்யா, ராணுவம் சார்ந்த தொழில்நுட்ப தகவல்களை அளிக்க தயக்கம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையேயான முதல் சந்திப்பு, கடந்த 2019ஆம் ஆண்டில் பியாங்யாங் நகரில் நடைபெற்று இருந்தது. இந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தற்போது விளாடிவோர்ஸ்டாக் நகரத்தில் நடைபெற்று வரும் சர்வதேச மாநாட்டில் பங்கேற்று உள்ளார்.

இந்த மாநாடு, செப்டம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. புதின் - கிம் இடையேயான சந்திப்பு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. கரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து, கடந்த 3 ஆண்டுகளாக வடகொரியா கடுமையான நடைமுறைகளை பின்பற்றி வரும் நிலையில், அதிபர் கிம் முதல் முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

ரஷ்யா - வடகொரியா நாட்டு தலைவர்கள் விரைவில் சந்தித்துப் பேச உள்ளதாக, அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்னரே, தகவல் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா, வடகொரியாவிற்கு அணு ஆயுதங்கள் விற்பனை செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு இல்லை என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் அட்ரீன் வாட்சன் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: டிஜிட்டல் கட்டமைப்பில் ஜி20 நாடுகளுக்கிடையே கருத்தொற்றுமை - இந்தியாவிற்கு பில்கேட்ஸ் பாராட்டு!

ABOUT THE AUTHOR

...view details