தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 18, 2022, 10:54 AM IST

ETV Bharat / international

அமெரிக்காவை மிரட்டும் ஏவுகணை!. வடகொரியா சோதனை

அமெரிக்கா தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட தொலைதூர ஏவுகணையை வடகொரியா சோதனை செய்தது.

North Korea fires another ballistic missile  north korea latest missile fire  north korea news today  north korea latest news today  North Korea President latest news  North Korea President news today  North korea foreign minister Choe Son Hui  North Korea  long range missile  long range missile designed to hit US  ஏவுகணை  தொலைதூர ஏவுகணையை வடகொரியா பரிசோதனை  வடகொரியா  தொலைதூர ஏவுகணை  அமெரிக்காவை தாக்கும் வகையில் ஏவுகணை  கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை  குறுகிய தூர ஏவுகணை  அமெரிக்க அதிபர் ஜோ பிடன்  ஜோ பிடன்  தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல்  யூன் சுக் யோல்  ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா  ஃபுமியோ கிஷிடா  பேரழிவு ஆயுதங்கள்  பாலிஸ்டிக் ஏவுகணை
அமெரிக்காவை தாக்கும் வகையில் ஏவுகணை

சியோல்:கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், வட கொரியாவின் "சட்டவிரோதமான பேரழிவு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களால்" அச்சுறுத்தலுக்கு தீர்வு காண்பதற்கான வழிகள் பற்றி விவாதித்தாக வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.

இதற்கு பதிலடி தருகிற வகையில், நேற்று (நவம்பர் 17) கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றையும், குறுகிய தூர ஏவுகணை ஒன்றையும் வடகோரியா சோதித்துள்ளது. ஹொக்கைடோவிற்கு மேற்கே சுமார் 210 கிமீ (130 மைல்) கடலில் ஏவுகணை விழுந்ததாக ஜப்பானின் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

இதற்கு சர்வதேச நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், அதனை பொருட்படுத்தாத வட கொரியா, மீண்டும் அமெரிக்காவை தாக்கும் வகையில் நீண்ட தூரம் செல்லும் ஏவுக்ணையை இன்று (நவம்பர் 18) காலை பரிசோதித்துள்ளது. வடகொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை காலையில் இந்த சோதனை நடைபெற்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடகொரியா கடந்த இரண்டு மாதங்களில் 50க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியுள்ளது, அவற்றில் பெரும்பாலானவை குறுகிய தூர ஏவுகணைகள். இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இதையும் படிங்க: சபாநாயகர் பதவியில் இருந்து விலகுகிறார் நான்சி பெலோசி!.

ABOUT THE AUTHOR

...view details