தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

குடும்பத்தில் உள்ள 9 பேருக்கும் ஒரே நாளில் பிறந்தநாள்.. கின்னஸ் சாதனையின் பின்னணி என்ன? - pakistan family guiness record

பாகிஸ்தானை சேர்ந்த ஒரு குடும்பத்தில் உள்ள 9 உறுப்பினர்களும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடி வரும் நிலையில், அவர்களை கின்னஸ் நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி உள்ளது.

Pakistan
Pakistan

By

Published : Jul 13, 2023, 7:28 PM IST

சிந்து:பாகிஸ்தானை சேர்ந்த 9 உறுப்பினர்களை கொண்ட குடும்பத்தினர் தங்களுக்குள் உள்ள ஒரு ஒற்றுமையின் காரணமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து ஆச்சரியப்படுத்தி உள்ளனர். ஒரே மாதிரியான குடும்பப் பெயரை கொண்டு இருந்ததால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்களா என்றால் அதுதான் கிடையாது.

9 பேரும் தங்களது பிறந்த தினத்தை ஒரே நாளில் கொண்டாடுவதன் மூலமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள லர்கனா நகரைச் சேர்ந்தவர்கள் தான் அந்த குடும்பத்தினர். தாய், தந்தை, 7 குழந்தைகள் என மொத்தம் 9 உறுப்பினர்களை கொண்ட அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி ஒருசேர தங்கள் பிறந்த நாளை கொண்டாடுகின்றனர்.

அமீர் அலி, குதேஜா தம்பதிக்கு, கடந்த 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த தம்பதிக்கு திருமணமும், அவர்கள் இருவரது பிறந்த நாளில் தான் என்பது தான். சரியாக ஒராண்டுக்கு பின் 1992 ஆம் ஆண்டு அதே ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி இந்த தம்பதிக்கு சிந்து என்ற பெண் குழந்தை பிறந்து உள்ளது.

சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்த தம்பதிக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. அதுவும் அதே ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி தான். அதன்பின் ஏறத்தாழ 5 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் அமீர் அலி - குதேஜா தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீர் அலி - குதேஜா தம்பதிக்கு ஒட்டுமொத்தமாக பிறந்த 7 குழந்தைகளும் முன்கூட்டியோ அல்லது அறுவை சிகிச்சை மூலமாகவோ பிறக்கவில்லை என்றும் சுகப்பிரசவத்தில் பிறந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், ஏதேச்சையாக நடந்த சம்பவத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரும் ஒரே நாளில் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

முன்னதாக 1952 மற்றும் 1966 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி பிறந்த அமெரிக்காவைச் சேர்ந்த கம்மின்ஸ் குடும்பத்தின் ஐந்து குழந்தைகள் இந்த சாதனையை பிரிவில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து இருந்தனர். தற்போது கம்மின்ஸ் குடும்பத்தை பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தானை சேர்ந்த அமீர் அலி - குதேஜா குடும்பம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது.

இதையும் படிங்க :பிரதமர் மோடி பாரீஸ் பயணம்! பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கிறார்!

ABOUT THE AUTHOR

...view details