சான் ஃபிரான்சிஸ்கோ: மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியில் "sign language (சைகை மொழி) view" அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது காதுகேளாதவர்கள் மற்றும் சைகை மொழியைப் பயன்படுத்தும் பிறருக்கு உதவும்.
இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம், "சைகை மொழிக் காட்சி (sign langugae view) இயக்கப்பட்டால், முன்னுரிமை அளிக்கப்பட்ட வீடியோ ஸ்ட்ரீம்கள் சரியான விகிதத்தில் மற்றும் கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த இடத்தில் தோன்றும். இதனால், அந்த வீடீயோ அனைவரின் பார்வைக்கும் தெரியும் வகையில் அமைந்திருக்கும்" என தெரிவித்துள்ளது.