தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ட்ரம்ப்புடனான திருமணம் குறித்த வதந்திகள்: முற்றுப்புள்ளி வைத்த மெலனியா - : ‘தி அன்டோல்ட் ஸ்டோரி ஆப் மெலனியா ட்ரம்ப்’

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் ஒப்பந்த அடிப்படையில் திருமணம் செய்துகொண்டதாக பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை என ட்ரம்ப்பின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலனியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்புடனான திருமணம் குறித்த வதந்திகள்: முற்றுப்புள்ளி வைத்த அமெரிக்காவின் முதல் பெண்
ட்ரம்ப்புடனான திருமணம் குறித்த வதந்திகள்: முற்றுப்புள்ளி வைத்த அமெரிக்காவின் முதல் பெண்

By

Published : Jun 14, 2020, 8:53 AM IST

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் நிருபர் மேரி ஜோர்டன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் ஒப்பந்த அடிப்படையில் திருமணம் செய்துகொண்டதாக, தி ஆர்ட் ஆஃப் ஹெர் டீல்: 'தி அன்டோல்ட் ஸ்டோரி ஆப் மெலனியா ட்ரம்ப்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்காக இவர் ஐந்து நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் நேர்காணல் எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதில் தற்போதைய அமெரிக்காவின் முதல் பெண்மணியாக உள்ள மெலனியா ட்ரம்ப், ட்ரம்ப் உடனான திருமணத்திற்கு முன் சில ஒப்பந்தங்களை முன்வைத்ததாகவும் அதற்கு ட்ரம்ப் சம்மதித்த பிறகே இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

286 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'ட்ரம்ப்பின் பரம்பரை வாரிசாகவும், சொத்துக்களில் அவரது முன்னாள் மனைவிகளின் மூன்று பிள்ளைகளுக்கு இணையாக போரனுக்கும் (மெலனியாவின் முன்னாள் கணவருக்குப் பிறந்த மகன்) பங்களிப்பு வழங்க வேண்டும் என ட்ரம்ப் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க மெலனியா நிர்பந்தித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட பின் அவருக்கு உள்ள செல்வாக்கினை அறிந்துகொண்டு, ட்ரம்ப்புடன் வாழ்வது குறித்து மெலனியா சிந்தித்துள்ளார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற ஆறு மாதங்கள் கழித்தே வெள்ளை மாளிகைக்கு வந்த அவர், இந்த இடைப்பட்ட காலத்தில் ட்ரம்ப்புடன் செய்துகொண்ட திருமண ஒப்பந்தத்தை பரிசீலனை செய்வதற்காக பயன்படுத்திக்கொண்டார்.

தனது மகன் போரனின் பள்ளிப்படிப்பை நியூயார்க்கில் தொடர விரும்பிய மெலனியா, முதல் பெண்மணியாக வெள்ளை மாளிகைக்கு வராமல், நியூயார்க்கிலேய தங்கியதாகவும், 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெற்றதையடுத்து, அவருக்கு துணையாகவும், அமெரிக்காவிற்கு ஒரு முதல் பெண்மணி தேவை என்ற எண்ணத்திலுமே மெலனியா வெள்ளை மாளிகைக்கு வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மெலனியாவின் மகன் போரனுக்கு பொருளாதார ரீதியிலும் இந்த முடிவு உதவியாக இருக்கும் எனவும், ட்ரம்ப் அவரது ஒப்பந்தங்களுக்கு சம்மதம் தெரிவித்த பிறகே, மெலனியா வெள்ளை மாளிகைக்கு வந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தில் வெளியான தகவல்களை மெலனியா ட்ரம்ப்பின் அலுவலகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. இந்தப் புத்தகத்தில் வெளியான தகவல்கள் எதுவும் உண்மையில்லை எனவும், இது ஒரு கற்பனைக் கதை என்றும்; அமெரிக்க முதல் பெண்மணியின் தலைமை அலுவலர் ஸ்டீபெய்ன் கிரிஷம் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details