ஜப்பானின் பசிபிக் பெருங்கடலில் ஜப்பான் நாட்டுக்கு அருகே இன்று காலை உள்ளூர் நேரப்படி 7.44 மணிக்கு வடகொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைவிழுந்துள்ளது. இந்த ஏவுகணை ஜப்பான் கடல் எல்லை வழியாக ஏழப்பட்டுள்ளது. இதனால் ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவு மற்றும் வடகிழக்கில் உள்ள அமோரி ஆகிய பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் கடல் எல்லையில் வடகொரிய ஏவுகணை - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
சர்வதேச கடல் எல்லையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வரும் நிலையில், தற்போது ஜப்பான் கடல் எல்லையில் ஏவுகணை சோதனையை செய்துள்ளது.
ஜப்பான் மீது வடகொரியா ஏவுகணை வீச்சு - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இதனிடையே வடகொரியா அதன் ஜகாங்கில் உள்ள முப்யாங்-ரியாவில் இருந்து கிழக்கு நோக்கி ஏவுகணை ஏவியதாக தென்கொரிய ராணுவமும் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா - தென்கொரியா இடையே கூட்டு ராணுவ பயிற்சி நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஈரானின் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தில் தொடர்புடைய இந்திய நிறுவனத்திற்கு தடை