டெல் அவிவ் :ஹாமாஸ் குழுவின் விமான படை தளபதியை கொன்று விட்டதாக இஸ்ரேல் விமான படை தெரிவித்து உள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நூற்றாண்டுகள் கடந்து பிரச்சினை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு 7வது நாளாக இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. பேரழிவின் பிடியில் உள்ள காசாவில் இருந்து மக்கள் வெளியேறுமாறு ஐ.நா. தெரிவித்து உள்ளது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் இதுவரை ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கக் கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதேபோல் இஸ்ரேல் தரப்பில் இதுவரை ஆயிரத்து 200 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இஸ்ரேல், காசா என இரு தரப்பிலும் சேர்த்து உயிரிழப்பு எண்ணிக்கை மூன்றாயிரத்தை நெருங்கியன் நிலையில், காசாவின் வடக்குப் பகுதியில் இருந்து 11 லட்சம் மக்களை வெளியேற்றும்படி ஐ.நா. மூலம் ஹமாஸ் குழுவுக்கு இஸ்ரேல் வலியுறுத்தி உள்ளது. 24 மணி நேரத்தில் 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படாவிட்டால் தரைவழித் தாக்குதலில் மோசமாக பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும் என இஸ்ரேல் எச்சரித்து.