ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மஹ்ஸா அமினி (22) எனும் பெண்மணி, சரியாக ஹிஜாப் அணியவில்லை என்பதால் கைது செய்யப்பட்டார். அப்போது காவலர்கள் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஈரானில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. தற்போது வரை போராட்டங்கள் குறைவதாக தெரியவில்லை. மாறாக, மேலும் 80 நகரங்களுக்கு பரவியுள்ளது.
குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள சாக்வெஸ் நகரத்தில், குர்து மக்கள் பெரும்பான்மையாக சன்னி இஸ்லாம் மதத்தை கடைபிடிக்கிறார்கள். அங்குதான் மஹ்ஸா அமினி அடக்கம் செய்யப்பட்டார். ஈரானிய வழக்கப்படி, மக்கள் தங்கள் அன்பானவர்களின் மறைவுக்குப் பிறகு 40 வது நாளில் துக்கப்படுவதற்கும், துயரமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்கும் கூடுவது வழக்கம்.
அதன்படி அமினியின் மரணத்திற்குப் பிறகு 40-வது நாளில் மக்கள் அஞ்சலி செலுத்த ஒன்று கூடினர். அப்போது நடைபெற்ற வன்முறை சம்பவத்தால், பங்கேற்பாளர்களில் பலர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். வெளிப்படையாக, இது ஐஎஸ்ஐஎஸ்- இன் வேலை என கூறப்பட்டது, ஏனெனில் முதன்மையாக அமெரிக்காவின் உத்தரவின் பேரில், குர்து மக்கள் சிரியாவில் அவர்களுக்கு எதிராகவே போரிட்டு வருகின்றனர்.
இதற்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பு ஏற்றுக்கொண்டது எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை, மேலும் சம்பவத்திற்கு எதிர்ப்புகள் தொடர்ந்தது மட்டுமல்லாமல், போராட்டம் நகரம் முழுவதும் தீவிரமடைந்தது.
சாக்வெஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்கள் ஹிஜாப்களை கிழித்து, பொதுவெளியில் தீ வைத்து கொளுத்தினர். போராட்டங்கள் வன்முறையாக மாறிய பிறகு, அவை கட்டுப்பாட்டை மீறிச் சென்றன.
இதனை வளராமல் கட்டுப்படுத்த ஈரானின் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க தொடங்கியது. அந்த சமயத்தில் ஏற்பட்ட மரணங்கள் மேலும் போராட்டங்களை தவிர்க்க முடியாததாக ஆக்கியது. ஈரானிய புரட்சிக்கு பின்னர் குர்து மக்கள் ஈரானின் பார்வைக்கு தகாதவர்கள் ஆகிவிட்டனர். இதனால் தான் குர்து இனத்தவரான மஹ்ஸா அமினி, கொல்லப்பட்டதாக மக்கள் நம்புகிறார்கள்.
கலை மற்றும் கைவினைப்பொருட்களின் நகரமான இஃப்ஷாஹான், சுமார் 20,000 பாரசீக யூதர்களின் தாயகமாகும். இஃப்ஷாஹான் பெரும்பாலும் அமைதியான நகரமாக இருந்து வருகிறது. 13 ஜெப ஆலயங்களைக் கொண்ட இந்த நகரம், அமைதியின்மை அல்லது சர்ச்சையின் பகுதியாக இருந்ததில்லை, 1979 ஆம் ஆண்டு ஈரானிய புரட்சிக்குப் பிறகு முன்னாள் தலைவர் அயோதல்லா கோமானி யூதர்களை தங்க அனுமதித்ததற்கு இதுவே காரணமாக இருக்கலாம்.
பிரிவினைவாத வரலாற்றைக் கொண்ட குர்திஸ்தானைத் தவிர, இஃப்ஷாஹான் மற்றும் சஹேதான் போன்ற நகரங்கள் நாடு முழுவதும் பெண்களுக்கு விதிக்கப்படும் விதிகள் குறித்து ரகசியமாக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன. இஷ்பஹானில் உள்ள பெண்கள், ஈரானின் பிற பகுதிகளில் உள்ள பெண்களுடன் சேர்ந்து தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டது மட்டுமில்லாமல், மஹ்ஸா அமினியின் கொலை மற்றும் நூற்றுக்கணக்கானவர்களின் கொலைக்கு காரணமானவர்கள் மீது வழக்குத் தொடர முயன்றனர்.
ஈரானில் அமைதியின்மை மற்றும் நடந்து வரும் போராட்டங்களுக்காக மேற்கு மற்றும் சியோனிஸ்டுகள் மீது குற்றம் சாட்டிய ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனி சமீபத்தில் தெரிவித்த கருத்துகள், இஸ்பஹானில் ஏற்பட்ட கொந்தளிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது.