தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாகிஸ்தானில் ஹிஜாப் கட்டாயம்! அரசின் உத்தரவால் மாணவிகள், பெண்கள் அதிருப்தி! - Hijab Mandate in pakistan

காஷ்மீர் ஆக்கிரமிப்பு பாகிஸ்தானில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவிகள், ஆசிரியைகள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 7, 2023, 12:47 PM IST

Updated : Mar 7, 2023, 12:53 PM IST

முசாபர்பாத்:பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள இணை கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகள், பெண் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என இம்ரான் கானின் பாகிஸ்தான் தெரிக் ஈ இன்சாப் கட்சி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இணை கல்வி நிறுவனங்களில் மாணவிகள், பெண் ஆசிரியர்களுக்கு ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கி அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்த அறிக்கையில், இணை கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந்த உத்தரவை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான செய்திகளை பாகிஸ்தான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த திடீர் உத்தரவுக்கு உள்ளூர் மக்கள் மற்றும் செய்தியாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர் மரியானா பாபர் தன் ட்விட்டர் பக்கத்தில், "பாகிஸ்தான் அக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பெண்கள் தங்கள் விருப்பத்தை தேர்வு செய்ய அரசு வழிவகை செய்ய வேண்டும், என்றும் மாறாக ஆண் மற்றும் பெண்களுக்கு எதிராக உத்தரவிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று பதிவிட்டு உள்ளார்.

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தாலிபான்களுடன், தெரிக் ஈ இன்சாப் அரசை ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பொது மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் பஞ்சம் நிலவுகிறது. ஆயிரக்கணக்கிலான மக்கள் பசியும் பட்டினியுமாக தவித்து வருகின்றனர். சுற்றுச் சூழல் மற்றும் கனிமவளத்துறையின் தொடர் பொருளாதார தடைகளால் ஆயிரக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்து அடுத்த வேளை உணவுக்கு அல்லல்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி நீர் தொட்டிக்குள் வைத்த கொடூர கணவன் கைது!

Last Updated : Mar 7, 2023, 12:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details